NATIONAL

மூன்று சுற்றுலா தளங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், ஜூன் 16: அம்பாங் லுக் அவுட் பாயிண்ட்டின் (ALOP) மறுவடிவமைப்பு, மாநிலத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் அடையாளமாக மாறும்.

சுங்கை சோங்காக், உலு லங்காட் மற்றும் தாமான் இகோ ரிம்பா காஞ்சிங், ரவாங் ஆகியவை பார்வையாளர்களைக் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்படும் என சுற்றுலா துறை பொறுப்பு உறுப்பினர் ஹீ லாய் சியான் கூறினார்.

“ALOP மறுவடிவமைப்பு அதன் தொடக்கமாகும். அதன் பிறகு சுங்கை சோங்காக் மற்றும் எகோ ரிம்பா நீர்வீழ்ச்சி இடங்களில் நான்கு-ஐந்து நட்சத்திர தங்குமிடம், கிளாம்பிங் (பிரபலமான கூடாரம்) உருவாக்குவோம்.

“இந்த முன்மொழிவு சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். இரண்டு மாதங்களில் அது நிறைவடையும் என நம்புகிறோம்,” என்றார்.

அம்மூன்று இடங்களும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை பேணுவதற்காக வளர்ச்சியை உள்ளடக்கவில்லை என்று லாய் சியான் மேலும் கூறினார்.

“எங்களிடம் பல சுவாரஸ்யமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன, ஆனால் தங்குமிடம் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் பலரின் கவனத்தை ஈர்க்கவில்லை.

“எனவே நாங்கள் இந்த வசதியில் கவனம் செலுத்துகிறோம், சிலாங்கூர் தொடர்ந்து சுற்றுலாத் தயாரிப்புகளை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :