SELANGOR

அனைத்து அடிப்படைப் பாடத்திட்டங்களுக்குமான கல்விக் கட்டணம் RM12,000 வரை – யுனிசெல்   உதவி 

ஷா ஆலம், ஜூன் 16: சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) புதிதாகப் பதியும் மாணவர்களுக்கு அடிப்படை பாடத்திட்டங்களுக்காக RM12,000 வரை அனைத்து கல்விக் கட்டண உதவிகளையும் வழங்குகிறது.

unisel.edu.my என்ற இணையத்தளம் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என முகநூல் வழி அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“யுனிசெல்லின் அனைத்து அடிப்படைப் பாடத்திட்டங்களும் மலேசியத் தகுதி முகமையால் (MQA) அங்கீகாரம் பெற்றவையாகும். இக்கல்விக்கான கற்கும் காலம் ஒரு வருடம் ஆகும், அது (மூன்று செமஸ்டர்களை கொண்டது). மேலும், யுனிசெல் பாதுகாப்பான மற்றும் வசதியான வளாக சூழ்நிலையைக் கொண்டுள்ளது.

“மாணவர்கள் கல்லூரி குடியிருப்புக்கு மட்டுமே மாதாந்தோறும் RM200 செலுத்த வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் வழங்கப்படும் அடிப்படை பாடத்திட்டங்கள் :

தகவல் தொழில்நுட்ப அடிப்படை பாடத்திட்டம்

அடிப்படை மேலாண்மை பாடத்திட்டம்

அடிப்படை அறிவியல் பாடத்திட்டம்

இளங்கலை கல்வி அடிப்படை பாடத்திட்டம் (ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல்)

இலக்கிய அடிப்படை பாடத்திட்டம்

அடிப்படை இஸ்லாமிய பாடத்திட்டம்

ஹஃப்பாஸ் ட்ராக் தகவல் தொழில்நுட்ப அடிப்படை பாடத்திட்டம்

Huffaz ட்ராக் மேலாண்மை அடிப்படை பாடத்திட்டம்

Huffaz ட்ராக் அறிவியல் அடிப்படைகள் பாடத்திட்டம்

ஹஃப்பாஸ் ட்ராக் இலக்கிய அடிப்படைகள் பாடத்திட்டம்

ஏதேனும் கேள்விகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, யுனிசெல்லின்  சந்தைப்படுத்தல் மற்றும் பதிவு அலுவலகம் 03-5522 3400 ஐ தொடர்பு கொள்ளவும்.


Pengarang :