NATIONAL

சிலாங்கூர் தேர்தல்- இரு தொகுதிகள் மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை

ஷா ஆலம், ஜூன் 19- விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்
தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலானப் பேச்சுவார்த்தையில் இரு
இடங்கள் மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்விரு தொகுதிகள் தொடர்பான விவகாரம் மேல் நடவடிக்கைக்காகக்
கட்சியின் மத்திய தலைமைத்துவத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது வரை, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 95 விழுக்காடு
பூர்த்தியடைந்து விட்டது. பாரிசான்-பக்கத்தான் இடையிலான
பேச்சுவார்த்தையில் இரு இடங்கள் மட்டுமே இன்னும் முடிவு
செய்யப்படாத நிலையில் இதனை மத்திய தலைமைத்துவம் முடிவு
செய்யும் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற 2023 மெகா வேலை வாய்ப்புச் சந்தையைத்
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு,
ஆகிய மாநிலங்களை இந்த தேர்தல் உள்ளடக்கியுள்ளது.


Pengarang :