SELANGOR

கார் இல்லாதக் கிள்ளான் தின நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜூன் 19: நேற்று கிள்ளான் பாடாங் செனி சபாரியில்  நடைபெற்ற கிள்ளான் நகராண்மை கழகத்தின் (MPK) கார் இல்லாத  தின நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

‘ஒற்றுமையே வலிமை ‘ என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டது என கிள்ளான் நகராண்மை கழகத் தலைவர் நோரெய்னி ரோஸ்லான் கூறினார்.

“கிள்ளான் மக்கள் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள். அதனால், ஒற்றுமை இல்லாமல், நாங்கள் வலுவாக இருக்க முடியாது,“என்றார்.

“பல இனங்கள் அதிகம் ஒன்றாக வாழாத கிழக்கு கடற்கரை போன்ற  இடங்கள் உள்ளன, ஆனால் இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்வதால், ஒருவருக்கொருவர் கலாச்சாரத்தை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது,” என்று அவர் நிகழ்ச்சியின் தொடக்க உரையில் கூறினார்.

ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை “Yayasan Sinar Untuk Malaysia Rasuah Busters“ உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  வருகையாளர்களைக் கவரப் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

போர்ட் கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பாதுகாப்பு கண்காட்சி, ஏரோபிக் உடற்பயிற்சி, குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் நிகழ்வு போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


Pengarang :