SELANGOR

சிலாங்கூர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 7,000 ஒப்பந்த அரசு பணியாளர்களில் 5,000 பேர் நிரந்தரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்

ஷா ஆலம், ஜூன் 19: சிலாங்கூர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 7,000 ஒப்பந்த அரசு ஊழியர்களில் மொத்தம் 5,000 பேர் இதுவரை நிரந்தரப் பதவிகளில் அமர்த்தப் பட்டுள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் ஸ்டேட் சர்வீஸ் கமிஷனின் (SPN) பரிந்துரைகளுக்கு இணங்க, நிரந்தர பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக அமிருடின் கூறினார்.

“பெரும்பாலோர் நிர்வாக அதிகாரிகள் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த நபர்கள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கூட்டாட்சி நிலைப்பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் சிலாங்கூர் மெகா கேரியர் கார்னிவல் 2023 இல் கலந்து கொண்ட பிறகு கூறினார்.

ஒப்பந்த நிலை அரசு ஊழியர்களின் நிரந்தர நியமனக் கொள்கை குறித்த சுற்றறிக்கையை பொது சேவைத் துறை (ஜேபிஏ) செயல்படுத்தவில்லை என்றும், ஆனால் அச் சுற்றறிக்கை ரத்து செய்யவில்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமிருடின் கூறினார்.

சுற்றறிக்கை மூலம் நிரந்தர நியமனம் என்பது பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

” நாங்கள் சுற்றறிக்கையை ரத்து செய்தால் தவறான புரிதல் ஏற்படலாம். அது ஒரு பிரச்சினையாக மாறும் வாய்ப்புண்டு. மேலும், மற்ற மாநிலங்களும் அந்த சுற்றறிக்கையை ரத்து செய்யவில்லை, செயல்படுத்தவும் இல்லை. இதன் பிறகு, ஜேபிஏவிடமிருந்து அதை பற்றி மேலும் தகவல்களை பெற்று கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒப்பந்த அரசு ஊழியர்களின் நிரந்தர நியமனக் கொள்கையை ரத்து செய்யும் முடிவை மாநில அரசு மறு ஆய்வு செய்யும் என்றும், கடந்த வெள்ளிக்கிழமை மாநில அரசு கூட்டுக் குழுவில் (எம்எம்கேஎன்) இந்த விவகாரம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது; அதன் முடிவை மாநில அரசு செயலாளர் அறிவிப்பார் என்றும் ஜூன் 13 அன்று அமிருடின் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :