NATIONAL

ஹஜி கடமையை நிறைவேற்ற சுல்தான் தம்பதியர் நாளை பயணம்

கிள்ளான், ஜூன் 19- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு
பெர்மைசூரி தம்பதியர் நாளை தொடங்கி ஜூலை 4ஆம் தேதி வரை
ஹஜி கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

தாமும் தெங்கு நோராஷிகினும் மேற்கொள்ளும் இந்த புனித யாத்திரை
சிறப்பான முறையில் அமைய பிரார்த்திக்கும்படி அரச மன்ற
உறுப்பினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மேன்மை
தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

தமக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் தொடர்பான நோய்க்குச் சிகிச்சை மற்றும்
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி
தாம் லண்டனுக்குப் பயணமாகவுள்ளதாக சுல்தான் கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நான் தாயகம் திரும்புவேன். உடல்
நிலை ஒத்து வந்தால் முன்கூட்டிய தாயகம் திரும்புவதற்கான சாத்தியம்
உள்ளது.

இந்த சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி பூரண ஆரோக்கியம்
பெறுவதற்கு இங்கு கூடியுள்ள அனைத்து அரச மன்ற உறுப்பினர்களும்
இறைவனை வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

ஆட்சியாளர் என்ற முறையிலும் சிலாங்கூர் மாநிலத்தின் இஸ்லாமிய
சமயத் தலைவர் என்ற முறையிலும் பணிகளை வழக்கம் போல்
மேற்கொள்வதற்கு ஏதுவாக தாம் முழுமையாகக் குணமடைந்து பழைய
ஆரோக்கியத்தைப் பெற முடியும் எனத் நம்புவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான அறிவிப்பை
இன்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் வெளியிட்ட போது
சுல்தான் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :