SELANGOR

மோரிப் கடற்கரை போல் கிளானாங் கடற்கரையை புகழ் பெறச் செய்ய திட்டம்

ஷா ஆலம், ஜூன் 19: பந்திங்கில் உள்ள கிளானாங் கடற்கரையைச் சிலாங்கூரில் உள்ள மோரிப் கடற்கரை போல் புகழ்பெற்ற பொழுதுபோக்குப் பகுதியாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பள்ளி விடுமுறை நாட்களிலும் ஓய்வெடுக்கும் வகையில் சுற்றுலாத் தளம் குடும்ப பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது என மோரிப் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ஏடிஎன்) ஹஸ்னுல் பஹாருடின் கூறினார்.

கிளானாங் கடற்கரையை உணவு வளாகங்கள் , சுராவ், பொது கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு பொது வசதிகளுடன் பொதுமக்களுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கு மாநில அரசின் ஆதரவு பங்களிக்கிறது.

கடந்த சனிக்கிழமையன்று  கிளானாங் கடற்கரை திருவிழாவின் நிறைவு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

உள்ளூர்வாசிகள் மற்றும் பொது மக்களின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு களை அடைய முடியாது என்று ஹஸ்னுல் மேலும் கூறினார்.

“உள்ளூர்வாசிகளின் தீவிர ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இன்னும் வலுவாக இருப்பதை நான் காண்கிறேன், இது இந்தப் பகுதி எப்போதும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்கிறது  என்று அவர் கூறினார்.


Pengarang :