SELANGOR

படிவம் நான்கு மற்றும் ஐந்து  மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள் 

ஷா ஆலம், ஜூன் 19: பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நான்கு மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் எதிர்வரும் ஜூலை 6 ஆம் தேதி சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) நடத்தும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள்.

ஶ்ரீ செர்டாங் பிரதிநிதி டாக்டர் மரியா மாமுட் அவர்களின் முகநூலில் பகிர்ந்ததின் அடிப்படையில் 10 நிகழ்வுகள் அதாவது பல்லாங்குழி, கோழி இறகை பந்து உதைத்தல் (sepak bulu ayam) மற்றும் பம்பரம் போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

“பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன! இளைஞர்கள்  வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என அறிவுறுத்தினார்.

சிலாங்கூர் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு கவுன்சில் (MPIS) உடன் இணைந்து நடத்தப்படவுள்ள இப் போட்டி ஷா ஆலம் வளாகத்தில் உள்ள யுனிசெல் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என டாக்டர் சித்தி மரியா மேலும் கூறினார்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு திரு.ஹைரின் 0192716394 அல்லது திருமதி.டலினா 0133407777 தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :