SELANGOR

திறன் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி திட்டங்களில் (TVET) கலந்து கொள்ள அழைப்பு – மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 20: சிலாங்கூரைச் சேர்ந்த  16 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்   சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையத்தில் (STDC) வழங்கப்படும் எட்டு திறன் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி திட்டங்களில் (TVET) கலந்துகொள்ள அழைக்கப் படுகிறார்கள்.

சிலாங்கூர் மாநிலத்தில்  11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் அதே வயது வரம்பிற்குட்பட்ட தனிநபர்களுக்கும் இந்த சலுகைக்கு விண்ணபிக்கலாம்  என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கூடுதலாகப் உயர்தரத் திட்டப் பங்கேற்பாளர்கள் பதிவுக் கட்டண உதவி, பயிற்சி மற்றும் தங்கும் இடங்களுக்கான  கட்டண உதவியையும் பெறுவார்கள்; அவை மாநில நிர்வாகத்தால் நிதியளிக்கப் படுகின்றன.

“இந்த ஜூன் அமர்வின் சிறப்பு பதிவின் மூலம், மாநிலம் சிலாங்கூர் ஸ்மார்ட் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் நிபுணத்துவத் திட்டத்தின் மூலம் மிகவும் திறமையான திறன் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி திட்டங்களுக்கு நிதியுதவியை வழங்குகிறது,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் வழங்கும் திட்டங்களில் வாகன தொழில்நுட்பம், ஸ்ப்ரே பெயிண்ட், மோட்டார் சைக்கிள் மற்றும் மின் தொழில்நுட்பம், ஏர் கண்டிஷனிங், ஃபேஷன், ஸ்பா தெரபி, சமையல், பேஸ்ட்ரி மற்றும் கணினி அமைப்புகள் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.


ஆர்வமுள்ளவர்கள் https://stdc.edu.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Pengarang :