NATIONAL

உள் ஊராட்சி பணியாளர் அமைப்பு (பிபிடி) மேம்படுத்தப்பட வேண்டும் – டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 20: சிறந்த நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில்  உள்ளூராட்சி பணியாளர் அமைப்பு (பிபிடி) மேம்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

அந்த விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு அதிகாரி ஒரே இடத்தில் அதிக காலம் பணியாற்றுவதை தவிர்க்கப் பிபிடி சர்வீஸ் கமிஷன் உருவாக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எண்ணம் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் மத்திய அரசில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு மற்ற மாநிலங்களும் அதை பின் பற்றுவதை உறுதி செய்வதற்காக உத்தேச அமைப்பு சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

“பிபிடி சர்வீஸ் கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும், காரணம் அப்போதுதான் இயக்குனரை நியமிக்க முடியும். முதலில் அதற்கான வடிவமைப்பைப் பார்க்க வேண்டும். இந்த முறையின் மூலம் ஒரு நபர் நீண்ட காலத்திற்கு அதே பதவியை வகிக்கும் போக்கை மாற்ற முடியும்.

“இந்த விஷயத்தை சமாளிக்க ஒரு கமிஷனை ஏற்பாடு செய்யுங்கள். புத்ராஜெயா அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், மாநில அரசு அதைச் செய்யும். குறைந்த பட்சம், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும், இதன் மூலம் அவர்கள் ஒரே இடத்தில் நிலை பெற மாட்டார்கள், “என்று அவர் கூறினார்.


Pengarang :