SELANGOR

இல்லத்தரசிகளைச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) பதிவு செய்ய அழைப்பு

கிள்ளான், ஜூன் 22: சிலாங்கூர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) மாநிலத்தில் உள்ள இல்லத்தரசிகளைச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டு 80,000 இல்லத்தரிசிகளை இலக்காகக் கொண்ட நிலையில், இதுவரை 3,000 பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என அதன் இயக்குனர் இஸ்மாயில் அபி ஹாஷிம் கூறினார்.

“இப்போது சிலாங்கூரில் இந்தப் புதிய திட்டத்தில் 3,000 பெண்கள் மட்டுமே பதிவு செய்துள்ளோம்.

“இதுவரை பங்களிக்காதவர்களை இணையத்தின் வழி பதிவு செய்யவோ, நேரில் வரவோ அல்லது அவர்களின் கணவர்கள் கூட தங்கள் மனைவிக்கு உதவ நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள கம்போங் பரிட் மஹாங்கில் சாலை விபத்தால் நிரந்தரமாக ஊனமுற்ற முஹமட் டேனியல் மூசா (22), என்பவருக்குப் பெர்கேசோவின் காப்புறுதி பங்களிப்பை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டம் இல்லத்தரசிகளுக்கு நிரந்தர ஊனம், மருத்துவ மற்றும் மறுவாழ்வு நலன்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு கொடுப்பனவு, டயாலிசிஸ் உதவி, ஓய்வூதியம் மற்றும் இறப்பிற்கு உதவுதல் மூலம் பாதுகாப்பை வழங்குகிறது.

12 மாதக் காலத்திற்கு RM120 பங்களிப்புடன், 55 வயதுடைய வேலை செய்யும் பெண்கள் அல்லது வேலையில்லாத பெண்கள் மற்றும் திருமணமானவர்கள் அல்லது திருமணம் ஆகாதப் பெண்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் 1 டிசம்பர் 2022 முதல் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு, www.perkeso.gov.my  பெர்கெசோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது 1-300-22-8000 எண்ணின் மூலம் பெர்கெசோ வாடிக்கையாளர் சேவையை நாடவும்.


Pengarang :