SELANGOR

3,489 நபர்கள் இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் மொத்தம் 3,489 நபர்கள் இலவசச் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாகச் சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் கூறினார்.

சுகாதார திட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில்,நோய் தாக்கம் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கியது என டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

“இரண்டாம் கட்டம் கடந்த வாரம் நிறைவடைந்தது. பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தங்கள் ஆரோக்கியத்தை சோதிக்க இத்திட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

“30 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் தான் நோய்களை முன்பே கண்டறிய அதிகமாக இத்திட்டத்திற்குப் பதிவு செய்கிறார்கள்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), கூட்டு நிர்வாக அமைப்புகள் (ஜேஎம்பி) அல்லது குறிப்பிட்ட ஏஜென்சிகளால் நடத்தப்படும் இலவச மருத்துவ பரிசோதனை எதிர்காலத்தில் தொடரும் என்று டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.

“எனவே குடியிருப்பாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.  இந்த இலவச மருத்துவப் பரிசோதனை செய்யும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்,” என்றார்.


Pengarang :