SELANGOR

40.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரி வசூலிப்பு – அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

அம்பாங், ஜூன் 28: இவ்வாண்டு ஜனவரி முதல் மே 30 வரை அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் (எம்பிஏஜே) மொத்தம் 40.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரி வசூலிக்க பட்டுள்ளது என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த வசூல் RM0.56 மில்லியன் அல்லது 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக RM87.5 மில்லியன் வசூலிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

“எம்பிஏஜே இந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் RM8.3 மில்லியன் மதிப்பிலான வரி பாக்கிகளை வசூலித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.72 மில்லியன் அல்லது 40.56 சதவீதம் குறைவாகும்” என்று அவர் கூறினார்.

நேற்று மெனாராவில் நடைபெற்ற அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மாதாந்திர நிறைவுக் கூட்டத்தில் பேசுகையில், ஒட்டுமொத்த வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.54 சதவீதம் அதாவது 5.16 மில்லியன் ரிங்கிட் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மதிப்பிடப்பட்ட வரி வசூல் உள்ளாட்சியின் ஆண்டு பட்ஜெட்டில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


வரி பாக்கி வசூல் இலக்கு RM17 மில்லியன் என்றும், முதல் தவணைக்கு 129,009 மொத்த பில்கள் வழங்கப் பட்டன என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :