NATIONAL

சிலாங்கூரில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் – மலேசியப் புள்ளியியல் துறை

ஷா ஆலம், ஜூன் 28: சிலாங்கூரில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று மலேசியப் புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.

2020 மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் உடற்தகுதி கேள்விக்குப் பதிலளித்த 16.1 மில்லியன் பேர்களில் 8.7 மில்லியன் குடியிருப்பாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகச் சினார் ஹரியன் தெரிவித்துள்ளது.

1.2 மில்லியன் மக்களுடன் ஜொகூர் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. “பெட்டாலிங் (445.9 ஆயிரம்), ஜொகூர் பாரு (392.5 ஆயிரம்) மற்றும் கின்தா (339.2 ஆயிரம்) ஆகியவை மிகவும் சுறுசுறுப்பான நிர்வாக மாவட்டங்களாக உள்ளன.

“8.7 மில்லியன் குடியிருப்பாளர்களில் மொத்தம் 62.4 சதவீதம் பேர் குறைந்தது ஒரு உடல் செயல்பாடு, 22.8 சதவீதம் (இரண்டு செயல்பாடுகள்), 14.8 சதவீதம் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்பாடுகள்) செய்கிறார்கள்” என மலேசியப் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பதிலளித்தவர்களில் 80 சதவீதம் பேர், விளையாட்டு மைதான வசதிகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் உடல் செயல்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட காரணியாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.


Pengarang :