NATIONAL

இயல்பாக வாக்காளராகும் நடைமுறையின் அமலாக்கத்தினால் பாயா ஜெராஸ் தொகுதியில் வாக்காளர்கள் அதிகரிப்பு

சுங்கை பூலோ, ஜூலை 3- இயல்பாக வாக்காளராகும் நடைமுறை
கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாயா ஜெராஸ்
தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் அமலாக்கம் காரணமாகக் கடந்த பொதுத்
தேர்தலின் போது 50,000 பேராக இருந்த பதிவு பெற்ற வாக்காளர்களின்
எண்ணிக்கை தற்போது 73,000 பேராக அதிகரித்துள்ளது என்று
அத்தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான்
கூறினார்.

பாயா ஜெராஸ் தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக
அதிகரித்துள்ளது. அவர்களில் 40 விழுக்காட்டினர் 18 முதல் 40 வயதுக்கு
உட்பட்டவர்களாவர் என்றார் அவர்.

இயல்பாக வாக்காளராகும் நடைமுறையின் காரணமாக வாக்காளர்கள்
எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இங்குள்ள
சவுஜானா உத்தாமாவில் நடைபெற்ற ஹஜிப் பெருநாள் பலியிடல்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் மாநிலத் தேர்தலில் தனது நிலையை முடிவு
செய்யும் பொறுப்பை கட்சித் தலைமைத்துவத்திடமே தாம் விட்டு
விதவதாக விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பாயா ஜெராஸ் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் ஆதிக்கத்தை நிலை
நிறுத்துவதற்காக தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பது உள்பட
அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர்
குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் சந்திப்பு
நடத்தினோம். சிலாங்கூரைத் தற்காப்பதற்காக இந்த ஒத்துழைப்பை
தொடர்ந்து வலுப்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :