SELANGOR

சர்வதேசப் பிளாஸ்டிக் பை  இல்லா தினத்தை  அனுசரிக்க மக்கள்  மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை  உபயோகிக்க ஊக்குவிப்பு

ஷா ஆலம், ஜூலை 3: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேசப் பிளாஸ்டிக் பைகள் அற்ற தினத்தை முன்னிட்டு ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அதன் நிர்வாகப் பகுதிகளில் பொருட்களை வாங்கும் போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு வர மக்களை ஊக்குவிக்கிறது.

2025 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றும் பிரச்சாரத்திற்கு இந்த திட்டம் ஆதரவளிக்கும் என்று ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்தது.

ஷா ஆலம் மாநகராட்சி CAP SEA (தென்கிழக்கு ஆசியாவில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடை மீதான ஒத்துழைப்பு நடவடிக்கைகள்) இன் ஒரு முன்னோடித் திட்டத்தின் மூலம், இப்போது பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை நீக்கும் திட்டம் விரிவுபடுத்தியுள்ளது.

“கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தங்கள் பிரதான அலுவலக கட்டிடத்தில் தொடங்கி உள்ளூர் குடியிருப்பு பகுதிகள், சிறு வணிகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரை விரிவு படுத்தினோம். சில கடைகள் வாடிக்கையாளர்களுக்குப் பிளாஸ்டிக் பைகளை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டன” என்று எம்பிஎஸ்ஏ முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் “நோ பிளாஸ்டிக் பைகள்” என்ற கொள்கைக்கு ஏற்ப பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஷா ஆலம் நகரில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைத்து பின் அதை தடை செய்வதற்கான திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி தொடரும்.


Pengarang :