SELANGOR

செமெந்தா தொகுதியில் மலிவு விற்பனைக்குச் சிறப்பான வரவேற்பு- வெளியூர்களிலிருந்தும் மக்கள் பங்கேற்பு

கிள்ளான், ஜூலை 4- இங்குள்ள கெராயோங் 2, எம்.பி.கே.கே. மண்டபத்தில்
நேற்று நடைபெற்ற செமெந்தா தொகுதி நிலையிலான மலிவு ஏசான்
ரஹ்மா மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் சிறப்பான
வரவேற்பு கிடைத்தது.

இந்த விற்பனையில் செமெந்தா தொகுதி மக்கள் மற்றும்
வெளியூர்வாசிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து தங்களுக்குத்
தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.

கோழி, சமையல் எண்ணெய், அரிசி, போன்ற சமையல் பொருள்களை
வாங்குவதற்காகக் காப்பாரிலிருந்து தாம் இங்கு வந்ததாக ஆர்.வள்ளியம்மா
(வயது 48) கூறினார்.

வெளி சந்தைகளில் வாங்குவதைவிட இங்கு மலிவான விலையில்
பொருள்களை வாங்க முடிகிறது. இந்த மலிவு விற்பனையில் கோழி, ஒரு
தட்டு முட்டை மற்றும் 5 கிலோ அரசியை தலா 10.00 வெள்ளி விலையில்
வாங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வழக்கத்தைக் காட்டிலும் இம்முறை அதிகமான பொருள்களை
வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து நான்
மகிழ்ச்சியடைகிறேன். பொது மக்கள் குறிப்பாக வசதி குறைந்தவர்கள்
பயன்பெறுவதற்கு ஏதுவாக இந்த திட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என
எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

தமது வீட்டிற்கு அருகில் நடைபெறும் இந்த மலிவு விற்பனைகளில் தாம்
தவறாது கலந்து கொண்டு வருவதாக மிஷான் கிமான் (வயது 62)
கூறினார். இன்றுடன் ஐந்தாவது முறையாக தாம் இத்தகைய மலிவு
விற்பனைகளில் பங்கேற்பதாக அவர் சொன்னார்.

இந்த விற்பனைத் திட்டத்தின் மூலம் செலவினத்தைக் குறைக்க
முடிவதோடு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டில் உணவுப் பொருள் தட்டுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய முடிகிறது என அவர் கூறினார்.

இதனிடையே, இந்த மலிவு விற்பனையில் முதன் முறையாகப் பங்கு
கொண்ட தமக்கு இங்கு பொருள்களின் விலை மலிவாக உள்ளது
வியப்பைத் தருகிறது என்று சித்தி மஸ்வாத்தி (வயது 57) கூறினார்.


Pengarang :