NATIONAL

போதைப் பொருள் குற்றங்களுக்காக 287 அரசு ஊழியர்கள் உள்பட 90,000 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 4 – போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 287 அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 92,257 பேர்
போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 298 பேர் 1985ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்  (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கமருடின் முகமது டின் கூறினார்.’

எஞ்சிய குற்றவாளிகள் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம், 1952ஆம் ஆண்டு விஷச் சட்டம் மற்றும் 1983 ஆம் ஆண்டு போதைப்பொருள் சார்ந்த (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம்  ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் 35,058 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு 35,058 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த காலகட்டத்தில் 185 போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டு 8 சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆறு ஆய்வாளர்களும்  கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை  முடக்குவதற்காக  அக்கும்ல்களுக்குச் சொந்தமான 5 கோடியே 59 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு  சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 53 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் நேற்றிரவு  அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :