SELANGOR

பொது மக்களின் வசதிக்காக பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் சாலை சீரமைப்பு

ஷா ஆலம், ஜூலை 4- மாநிலத்தில் பழுதடைந்தச் சாலைகளைச்
சீரமைக்கும் பணி கடந்த மே மாதம் முதல் மிகப்பெரிய அளவில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுபாங் ஜெயா,
பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் சாலையைச் செப்பனிடும் பணியை
இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு
வருகிறது.

பழுதடைந்த சாலையின் மேல்பகுதியை அகற்றி விட்டு புதிதாக சாலை
அமைக்கும் முறையைப் பயன்படுத்தி இந்த சாலை சீரமைப்புப் பணிகள்
மேற்கொள்ளப்படுவதாக அந்த சாலை பராமரிப்பு நிறுவனம் கூறியது.

சுபாங் ஜெயா, பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் சாலையைச்
செப்பனிடும் பணி இதுவரை 40 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது என்று
இன்ஃப்ராசெல் தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

பொது மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும்
உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணியை மாநில அரசு 5 கோடி வெள்ளி
நிதி ஒதுக்கீட்டில் மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 94.9 கிலோ மீட்டரை
உள்ளடக்கிய சாலைகளைப் பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்பட்டு
வரும் 50 கோடி வெள்ளி நிதி தவிர்த்து இந்த 5 கோடி வெள்ளி பிரத்தியேகமாக வழங்கப்பட்ட்டுள்ளது.

பொது மக்கள் டிவிட்டர் வாயிலாகத் தெரிவிக்கும் புகார்களின்
அடிப்படையில் 24 மணி நேரத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்து
வரும் இன்ஃப்ராசெல் நிறுவனம் கடந்தாண்டு வரை 39,000 பழுதுபார்ப்புப்
பணிகளை மேற்கொண்டுள்ளது.


Pengarang :