NATIONAL

மரத்தில் சிக்கி தேனீ தேடுபவர் இறந்தார்

கோத்தா பாரு, ஜூலை 4: நேற்று கம்போங் சாபாங் துங்காக், பாசிர் புத்தேவில் உள்ள 24 மீட்டர் உயரமுள்ள துவாலாங் மரத்தில் சிக்கி தேனீ தேடுபவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

பாசிர் புத்தே மற்றும் மச்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 16 உறுப்பினர்கள் மதியம் 1.09 மணி அளவில் அவசர அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என கிளந்தான் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர், சைனல் மடசின் கூறினார்.

“நேற்று இரவு 7.20 மணியளவில் அந்த நபர் மரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, பின் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ துறை உறுதிப்படுத்தியது,” என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேல் விசாரணைக்காக இரவு 8.12 மணியளவில் சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சைனல் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :