SELANGOR

2,800 சத்துணவுப் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன – அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாட்

ஷா ஆலம், ஜூலை 5: அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாட் (ASAS) திட்டத்தின் மூலம் மொத்தம் 2,800 சத்துணவுப் பேக்கட்டுகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம்மாத இறுதியில் விநியோகிக்கப்படும்.

இந்த உதவி கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் முதல் கட்டமாக கோம்பாக் தொகுதியில் (DUN) தொடங்கப்பட்டுள்ளது என மாநில பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

“அனைத்து 56 தொகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் இந்த உதவியை பெறுவார்கள். உடல்நலப் பிரச்சினைகளை உடைய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

“கோம்பாக்கில் தொடங்கப்பட்ட பின், பிற எட்டு மாவட்டங்களில் இந்த விநியோகம் தொடரும். உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பிஸ்கட், தானியங்கள், மல்டி வைட்டமின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற பொருட்களை வழங்குவதாக டாக்டர் முகமது ஃபர்ஹான் கூறினார்.

கடந்த ஆண்டு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தவிர்க்க 10 மாதங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் உதவி டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அறிவித்தார்.


Pengarang :