SELANGOR

ஜூலை 15  முதல் மலிவு விற்பனைகளில்  பாக்கெட் சமையல் எண்ணெய் 2.00 வெள்ளிக்கு விற்கப்படும்

ஷா ஆலம் ஜூலை 5-  இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைகளில் ஒரு கிலோ எடை கொண்ட பாக்கெட்  சமையல் எண்ணெய் இரண்டு வெள்ளிக்கு விற்கப்படும.

தொடக்க கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மலிவு விற்பனைகளில் தலா 170  சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் 2.00  வெள்ளி விலையில் விற்கப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய  மேம்பாட்டு கழகத்தின் சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி கூறினார்.

இது தவிர, போதுமான அளவு சீனி கையிருப்பு உறுதி செய்யப்பட்டவுடன் ஒரு கிலோ பாக்கெட் சீனியின் விற்பனை தொடங்கப்படும் என்று முகமது பாஸீர் அப்துல் லத்திப் கூறினார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் வரும் ஜூலை மாதம் தொடங்கி மேலும் இரு பொருட்கள் அதாவது சீனி மற்றும் பாக்கெட் வடிவிலான எண்ணெய்  ஆகியவை சேர்க்கப்படும் என்று பி.கே.பி.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி முகமது டாக்டர் கைரில் முகமது ராசி கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி கூறியிருந்தார்

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது .


சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் ஏசான் ராக்யாட் எனும் பெயரில் நடத்தப்பட்டு வந்த இந்த  விற்பனை தற்போது வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜூவாலான்  ஏசான் ரஹ்மா என்னும் பெயரில் தொடரப்படுகிறது.


Pengarang :