SELANGOR

252 பிரச்சார அமலாக்கக் குழுக்கள் நிறுவப்படும் – தேர்தல் ஆணையம்

ஷா ஆலம், ஜூலை 5: பொதுத் தேர்தலுக்கான பிரச்சார காலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் (எஸ்பிஆர்) மொத்தம் 252 பிரச்சார அமலாக்கக் குழுக்கள் நிறுவப்படும்.

ஜூலை 29 முதல் இரண்டு வாரங்களுக்குப் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்க காவல் துறை, உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்படவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது.

“பிஆர்என் காலம் முழுவதும் 245 தேர்தல் நிர்வாக அதிகாரிகளையும், 740 உதவி தேர்தல் நிர்வாக அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது என இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே கூறினார்.

“இந்த முறை வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9,773,571 வாக்காளர்கள் உள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதியை வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29 ஆம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெறும்.


Pengarang :