SELANGOR

“வெஸ்ட் டு புட் “ திட்டத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் செயல்படுத்தியது

ஷா ஆலம், ஜூலை 5: வாழத் தகுதியான நகரத்தை உருவாக்கும் கொள்கையை நோக்கிய முன் முயற்சிகளில் ஒன்றாக “வெஸ்ட் டு புட் “ திட்டத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) செயல்படுத்தியது.

2021 முதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவுப் பிரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

“இந்த திட்டத்தின் மூலம், அம்பாங் ஜெயா குடியிருப்பாளர்கள் கோதுமை மாவு, பால் டின் மற்றும் சர்க்கரை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

“மெனாரா எம்.பி.ஏ.ஜே. அல்லது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாகன இல்லாதத் தினத்தின் போது இந்த பரிமாற்றத்தைச் செய்யலாம்” என்று மக்கள் தொடர்புத் துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகச் செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதுவரை பெறப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக், பெட்டிகள், காகிதம், செய்தித்தாள்கள், அலுமினிய கேன்கள், இரும்பு மற்றும் மின்னணு பொருட்கள் (இ-கழிவு) ஆகியவை அடங்கும்.

“ஜனவரி 2023 முதல், மொத்தம் 1,764.5 கிலோ மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் இத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமாகச் சேகரிக்கப் பட்டுள்ளன“.

பள்ளிகளில் தொடங்கி இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 21 அன்று பாடாங் பெர்பண்டாரான் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், பண்டான் இண்டாவில் 120 மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில் மறுசுழற்சி மையத் திறந்த நாளையும் எம்.பி.ஏ.ஜே ஏற்பாடு செய்தது.

இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் 03-42857044 என்ற எண்ணில் எம்.பி.ஏ.ஜே திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவுத் துறையை தொடர்பு கொண்டு மேலும் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.


Pengarang :