ANTARABANGSA

இதுவரை பதிவு செய்யப்படாத உலக வெப்பநிலை ஏற்படும்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 6: இந்த வாரம் இதுவரை பதிவு செய்யப்படாத உலக வெப்பநிலை ஏற்படும் என அமெரிக்கத் தேசியச் சுற்றுச்சூழல் முன்னறிவிப்பு மையம் (NCEP) தெரிவித்துள்ளது.

எல் நினோ நிகழ்வு மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் கோடைகாலத்தின் தொடக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் புவி அதிக வெப்பமடைகிறது என நிபுணர்கள் விளக்கினர்.

அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, புதன்கிழமை அமெரிக்காவின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான வெப்பம் ஏற்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் வசிக்கும் சுமார் 46.6 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் வெப்பமான காலநிலையால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

-பெர்னாமா-சின்ஹுவா


Pengarang :