NATIONAL

உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் நடவடிக்கையை எளிதாக்குவதற்கான அணுகுமுறை அடையாளம் காணப்படும்

ஜித்ரா, ஜூலை 7 – ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் ஆறு மாநிலத் தேர்தல்களில் வாக்களிக்க அவரவர் ஊர்களுக்கு திரும்பும் உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கான பொருத்தமான அணுகுமுறையை உயர்கல்வி அமைச்சகம் (MOHE) அடையாளம் காணும்.

அவர்கள் வாக்காளர்களாகத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பு விடுப்பு வழங்கலாமா என்பது குறித்து அமைச்சகம் விவாதம் நடத்தும் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ முகமட் யூசுப் அப்டால் கூறினார்.

“நாங்கள் குறிப்பாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தேவைகளைப் பார்ப்போம்,” என்று அவர் நேற்று சுல்தான் அப்துல் ஹலீம் முஹட்ஸாம் ஷா பாலிடெக்னிக்கில் நடந்த கண்காட்சியில் இடம்பெற்ற சர்வதேசக் கண்டுபிடிப்பு போட்டி (iCompEx 2023) முடிவடைந்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும், அது அவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என முகமட் யூசுப் தெரிவித்துள்ளார்.

மேலும், மத மற்றும் இனப் பிரச்சினைகyr அரசியலாக்குவதை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அவர் நினைவூட்டினார்.

– பெர்னாமா


Pengarang :