SELANGOR

செலாங்கா ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க விரிவாக்கப்படும் – மந்திரி புசார்

கோம்பாக், ஜூலை 10 – சிலாங்கூர் அரசாங்கத்தால் லங்கா மாசுக் டெங்கன் செலாமட் (SELangkah) செயலி, பயனர்களின் சுகாதாரத் தரவை டிஜிட்டல் மயமாக்கி, ஆரோக்கியம்  பற்றிய விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க விரிவாக்கப்படும்.

இந்த நடவடிக்கையானது பொது மக்களின் உடல் நிலையை அறிந்து கொள்ளவும், சுகாதார நிலையங்களில் பணியாளர்களின் பணியை எளிதாக்கவும் உதவும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் உள்ள மக்களுக்கான தரவு நுழைவு புள்ளியாக செலாங்கா செயல்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“இந்த திட்டம் அடுத்த ஆண்டு அல்லது இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும். சுகாதார அமைச்சு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

“இது நடவடிக்கை முக்கியமானது, ஏனெனில் இது (தனிப்பட்ட) சுகாதாரப் பதிவுகள் பற்றிய தகவல்களை வழங்குவதோடு இரத்த மாதிரி பிரிவுகள் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளது. அது மருத்துவரின் பணியை எளிதாக்கவும் முடியும்,” என்று அமிருடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செயலி மாநிலத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க சிலாங்கூர் அரசாங்கத்தால் முன்பு உருவாக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :