SELANGOR

மீடியா சிலாங்கூர் மாநில அரசுக்கும் மக்களுக்கு மிக முக்கியமான நிறுவனமாகும்

ஷா ஆலம், ஜூலை 10: மீடியா சிலாங்கூர் எஸ் டி என் பிஎச்டி (எம்எஸ்எஸ்பி) மாநில அரசுக்குக் குறிப்பாக மக்களுக்கு சேவையாற்ற மிக முக்கியமான நிறுவனமாகும் என்று டத்தோ மந்திரி புசார் விவரித்தார்.

எம்பிஐயின் துணை நிறுவனமான மீடியா சிலாங்கூர் மாநிலம் பற்றிய தகவல் வழங்குதல் மற்றும் மக்களுக்கு  அரசாங்க திட்டங்கள் போன்றவைகளில்  வழிகாட்டியாகவும் அமையும் வகையில் இன்னும் மேம்படுத்தப் படலாம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நாம் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாகச் சிலாங்கூர் அறிமுகப்படுத்திய “முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1)“ உள்ளது. இது வரவிருக்கும் மாநிலத்தின் பாணியையும் வடிவத்தையும் அடையாளப்படுத்தும்.

“எம்.எஸ்.எஸ்.பி.யும் தேர்தலை முன்னிலை படுத்த சில அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். சிலாங்கூரின் முக்கியமான அதிகாரப்பூர்வ தளம் நாங்கள் என்பதை காட்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று, மெனாரா பேங் ரக்யாட்டில் உள்ள மீடியா சிலாங்கூருக்குச் சிலாங்கூர் மந்திரி புசார் சிறப்பு வருகை புரிந்தார். அந் நிகழ்வில் சிறப்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அமிருடின் அவர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்க செயலர் டத்தோ ஹாரிஸ் காசிமுடன் காலை 10 மணியளவில் வருகை புரிந்தார். இந்நிகழ்வில் எம்பியின் தலைமை நிர்வாக அதிகாரி நோரிடா முகமது சிடேக் மற்றும் எம்எஸ்எஸ்பியின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஃபரீத் முகமது அஷாரியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமிருடின் ஷாரி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மீடியா சிலாங்கூர் ஊழியர்களுடன் நேரத்தை செலவிட்டார். அவர் செய்தி வாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்திய தோடு ஸ்டுடியோ மற்றும் வானொலி நிலையத்திற்குச் சென்று ஊழியர்களுடன் உரையாடினார்.

இங்குள்ள மெனாரா பேங் ரக்யாட்டில் அமைந்துள்ள எம்எஸ்எஸ்பியின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவையும் அவர் நிறைவு செய்தார்.


Pengarang :