NATIONAL

மேற்கு கடற்கரைச் சாலையின் புருவாஸ்-தைப்பிங் செலாத்தான் பகுதி இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும்

ஈப்போ, ஜூலை 11- மேற்குக் கடற்கரை நெடுஞ்சலையின் (டபள்யூ.சி.இ.)
மேலும் நான்கு பகுதிகளை இவ்வாண்டு இறுதியில் திறப்பதற்கு வேஸ்ட்
கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே சென். பெர்ஹாட் நிறுவனம் இலக்கு
நிர்ணயித்துள்ளது.

எஸ்.கே.வி.இ., பந்திங், அசாம் ஜாவா மற்றும் தைப்பிங் செலாத்தான்
ஆகிய பகுதிகளை இது உள்ளடக்கியிருக்கும் என்று டபள்யூ.சி.இ.
நிறுவனத்தின் நெடுஞ்சாலை நடவடிக்கைப் பிரிவு தலைவர் சைட் முகமது
நகுய்ப் சைட் முகமது கூறினார்.

இந்த நெடுஞ்சாலையின் 11வது பிரிவு அதாவது 35.5 கிலோ மீட்டர் நீளம்
கொண்ட புருவாஸ் முதல் தைப்பிங் வரையிலானப் பகுதியில் தற்போது
88 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அந்த பகுதி
இவ்வாண்டு இறுதிவாக்கில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது பொறியியல், டோல் சாவடி நிர்மாணிப்பு, மலைசாரல் பணிகள்
மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மீது அங்கு கவனம் செலுத்தப்படுகிறது
என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
சொன்னார்.

இந்த நெடுஞ்சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச்
செல்வதால் வன விலங்குகளுக்கு வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கும்
சூழலியலைக் காப்பதற்கும் ஏதுவாக ஆங்காங்கே சுரங்கப் பாதை
அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் வசதிக்காகத்
தெலுக் இந்தான், சுங்கை வாங்கி, ஆயர் தாவார் மற்றும் சுங்கை
நியோரில் நான்கு ஓய்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.


Pengarang :