SELANGOR

மலிவு விற்பனையினால் கவரப்பட்டு வாக்களிக்கும் இடத்தை சிலாங்கூருக்கு மாற்றிய வர்த்தகர்

செலாயாங், ஜூலை 11- ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை உள்ளிட்ட
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்ட சிறுவணிகர் ஒருவர்
தனது வாக்களிக்கும் இடத்தை சிலாங்கூருக்கு மாற்றியுள்ளார்.

கிளந்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட போதிலும் வருமானம்
ஈட்டும் இடமாக சிலாங்கூரை கொண்டுள்ள ஹம்சா நோர்டின் (வயது 50)
மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்காக பத்துக்கும்
மேற்பட்ட தடவை இந்த மலிவு விற்பனைக்கு வந்துள்ளதாகச் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக்
குறைப்பதில் பெரிதும் துணை புரிகிறது. இதற்கு முன்னர் நான் ஷா
ஆலமில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து
வந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலையிலிருந்து விலகி
இங்குள்ள தாமான் பெலாங்கியில் குடியேறி வீட்டின் எதிரே சிறிய கடை
ஒன்றை நடத்தி வருகிறேன்.

சிலாங்கூரில் குடியேறியது முதல் மாநில மக்களுக்கு பல்வேறு உதவித்
திட்டங்கள் அமல்படுத்தப்படுவத்தைக் காண்கிறேன். அவற்றில் எனக்கு
மிகவும் பயனளிப்பது மலிவு விற்பனையாகும். பொருளாதாரம்
நலிவடைந்த மற்றும் பொருள் விலையேற்றம் கண்ட இக்காலக்கட்டத்தில்
இந்த மலிவு விற்பனை எனக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றார்
அவர்.

ஆகவே, முதன் முறையாக இந்த தேர்லில் நான் என் மனைவியுடன்
ரவாங் தொகுதியில் வாக்களிக்கவிருக்கிறேன். காரணம், சிலாங்கூர்
மக்களுக்கு கிடைக்கும் எதுவும் கிளந்தான் மக்களுக்கு கிடைக்கவில்லை
என்று அவர் சொன்னார்.

இதனிடையே, மக்களுக்கு பெரிதும் பயன் தரக்கூடிய இந்த மலிவு
விற்பனைத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக
ஓய்வு பெற்ற ஆசிரியரான இப்ராஹிம் நவின் (வயது 74) கூறினார்.

குடும்பங்களின் பொருளாதாரச் செலவை பெரிதும் குறைக்க உதவும் இந்த
திட்டம் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் வரும்
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :