SELANGOR

மலிவு விற்பனை திட்டத்தில் உலர் பொருட்கள் அறிமுகம்

ஷா ஆலம், ஜூலை 11: செமெந்தா தொகுதியில் நடைபெறும் மலிவு விற்பனையில் குடியிருப்பாளர்களுக்கு உலர் பொருட்கள் விற்கப்படும்.

இதில் கிச்சாப், மீகோன் மற்றும் பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும் என்று தொகுதி ஒருங்கிணைப்பாளர் அஃப்ரிஷா அஜிஸி கூறினார்.

“உள்நாட்டு மக்களுக்கு உலர் பொருட்களைக் கொண்டு வருவதற்காக நாங்கள் சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்துடன் கலந்துரையாடினோம். கிள்ளான் பெர்டானாவில் இன்று முதல் பிகேபிஎஸ் உலர் பொருட்களை குடியிருப்பாளர்களுக்குக் கொண்டு வருகிறது.

பி.கே.பி.எஸ் எதிர்வரும் ஜூலை 15 முதல், பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு கிலோகிராம் எண்ணெய் பாக்கெட்டை RM2 என்ற விலையில் விற்பனை செய்கிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :