NATIONAL

சமூக நலத் துறைக்கு ஆண்டுதோறும் RM28 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 11: சிலாங்கூர் அரசாங்கம் சமூக நலத் துறைக்கு (JKM) ஆண்டுதோறும் RM28 மில்லியனை ஒதுக்குகிறது.

“கடந்த சில ஆண்டுகளாகச் சமூக நலத் துறைக்கு உதவ நாங்கள் RM28 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். சிலாங்கூர் ஒரு முற்போக்கான மற்றும் வளரும் மாநிலம் என்பதனால் மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை வழங்க முயற்சிக்கிறோம்,” என்று சமூக நலத்துறை பொறுப்பு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான், நிர்வாகத்தின் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து (2008) அதன் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கம், மாநில மக்களுக்கு உதவ பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் கீழ் உள்ள திட்டங்கள் காலப்போக்கில் மேம்படுத்தப்பட்டு நிறைய திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் புதிதாகச் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டம் (இன்சான்) அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :