SELANGOR

கம்போங் பெஸ்தாரி ஜெயா சமூக மண்டபம் வெ.50,000 செலவில் சீரமைக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 12- கம்போங் பெஸ்தாரி ஜெயா சமூக மண்டபம் 50,000
வெள்ளி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதன் வழி வட்டார
மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளைச் சௌகர்யமான சூழலில்
நடத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் (பி.எஸ்.பி.) திட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்ட
நிதியை கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகப் பெர்மாத்தாங்
தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் கூறினார்.

அந்த மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகள் கடந்த மே மாதம் 22ஆம் தேதி
தொடங்கப்பட்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி முழுமைப் பெற்றது என
ரோஸானா ஜைனால் அபிடின் தெரிவித்தார்.

மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த கம்போங் பெஸ்தாரி
ஜெயா சமூக மண்டபத்தைச் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டது
என்றும் அவர் சொன்னார்.

மண்டபத்தைச் சுற்றியுள்ள வேலியை சீரமைப்பது, செப்பாக் தக்ராவ்
திடலில் உள்ள விளக்குகளை சரி செய்வது, மின் விசிறிகளை மாற்றுவது,
உள்கூரையை சரி செய்வது போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ்
மேற்கொள்ளப்பட்டன என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் தொகுதிகளில் சிறு மேம்பாட்டுப்
பணிகளை மேற்கொள்வதற்காக 2 கோடியே 80 லட்சம் வெள்ளி
ஒதுக்கப்படுவதாக 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை
தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அறிவித்திருந்தார்.


Pengarang :