NATIONAL

பணமில்லா கிராமம் திட்டம் வலுப்பெற தொடங்கியுள்ளது – செக்கின்சான் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 12: செக்கின்சான் தொகுதியில் வசிப்பவர்களிடையே பணமில்லா கிராமம் திட்டம் வலுப்பெற தொடங்கியுள்ளது. அங்கு 5,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பள்ளி மாணவர்கள் இந்த முறையைப் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர் அதாவது அவர்கள் ஹொங் லியோங் வங்கியின் பணமற்ற பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன என்று செக்கின்சான் தொகுதி உறுப்பினர் கூறினார்.

“உண்மையில் இது ஒரு அசாதாரண சாதனையாகும், ஏனெனில் நாட்டிலேயே இந்த முறையை செயல்படுத்திய முதல் கிராமமாகச் செக்கிஞ்சன் உள்ளது” என்று இங் சுய் லிம் கூறினார்.


மேலும், இத்தொகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது என HLB டொமெனிக் ஃபுடாவின் குழு நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியும் தெரிவித்தார்.


Pengarang :