SELANGOR

ரிலாக்ஸ் மொபைல் லெஜண்ட் இ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் 120 பேர் பங்கேற்றனர்

ஷா ஆலம், ஜூலை 12: செமெந்தா தொகுதி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ரிலாக்ஸ் மொபைல் லெஜண்ட் இ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் சுமார் 120 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு, வீடியோ கேம் ரசிகர்களை ஒன்றிணைப்பதோடு இளைஞர்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ளும் அணுகு முறைகளிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது என அதன் ஒருங்கிணைப்பாளர் அஃப்ரிஷா அஸிஸி தெரிவித்தார்.

“இந்தப் போட்டியின் மூலம் இளைஞர்களை மத வேறுபாடுகள் இன்றி ஒரே ஈடுப்பாட்டின் கீழ் ஒன்றிணைக்க முடியும்.

“மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தால் பெரிய அளவில் இதேபோன்ற திட்டத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், வயதான குடிமக்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைச் சந்திப்பதன் மூலம் ஜியாரா பிரிஹாதின் செமெந்தா திட்டத்தையும் அலுவலகம் தீவிரப்படுத்தியுள்ளது.

“மேலும், உணவு கூடைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அஃப்ரிஷா கூறினார்.


Pengarang :