ANTARABANGSA

வேலையின்மை விகிதம் எதிர்பார்த்ததை விட உயர்ந்துள்ளது –  பிரிட்டன்

லண்டன், ஜூலை 12 – பிரிட்டனின் வேலையின்மை விகிதம் எதிர்பார்த்ததை விட உயர்ந்துள்ளது, அதே சமயம் ஊதியங்கள் அதிகபட்ச விகிதத்தில் அதிகரித்துள்ளது என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

 

வேலையின்மை விகிதம் மே மாதம் வரையிலான மூன்று மாதங்களில் நான்கு சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசியப் புள்ளியியல் அலுவலகம் (ONS)  தெரிவித்துள்ளது. முந்தைய மூன்று மாதக் காலத்தில் 3.8 சதவீதத்தில் இருந்து குறிப்பிடத்தக்கது.

 

மேலும், மே மாதம் வரையிலான மூன்று மாதங்களில் சராசரி வழக்கமான ஊதியம் 7.3 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது.

 

‘சமீபத்திய மூன்று மாதங்களில் மொத்த வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் தீவிரமாக வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது’ என தேசியப் பொருளாதார புள்ளியியல் அலுவலகம் இயக்குனர் டேரன் மோர்கன் கூறினார்.

 

“ஊதியம் மீண்டும் பண அடிப்படையில் சாதனை அளவில் உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், அதிக பண வீக்கம் காரணமாக, வாராந்திர வருவாய் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடைந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :