NATIONAL

22 மாதக் குழந்தையின் உடலில் போதைப் பொருள்- விசாரணைக்குத் தாயார் கைது

ஈப்போ, ஜூலை 13- ஒரு வயது 10 மாதம் நிரம்பிய தன் பெண் குழந்தை
போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆட்பட்டதற்குக் காரணமான பெண்ணை
போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்தக் குழந்தையின் உடலில் ஆம்பெட்டமின் மற்றும் மெத்தம்பெட்டமின் போதைப் பொருள் இருப்பது தொடர்பில் தைப்பிங் மருத்துவமனையின் மருத்துவரிடம்
இருந்து நேற்று தங்கள் தரப்பு அறிக்கையைப் பெற்றதாகத் தைப்பிங்
மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

வீட்டிற்குத் தேவையான மளிகைக் பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால் 22 வயதுடைய அப்பெண் தனது குழந்தையை பாட்டியின் வீட்டிற்கு அனுப்பியதாக அவர்
சொன்னார்.

பாட்டி வீட்டில் தூங்க முயன்ற அக்குழந்தை திடீரென அழுது ஆர்ப்பட்டம் செய்ததோடு அதன் செயல்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விநோதமாக இருந்துள்ளது. அப்பெண் உடனடியாக தன் குழந்தையைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசியான அக்குழந்தையின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர்
பரிசோதனையில் அவர் மெத்தாம்பெட்டமின் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது
கண்டறியப்பட்டது என்று ரஸ்லாம் கூறினார்.

2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் 31(1) (a) பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்ட்டுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :