NATIONAL

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் ஜொகூர் அரசாங்கத்திடம் கொண்டு செல்லப்படும்

கோலா சிலாங்கூர், ஜூலை 13: மக்களுக்கு நன்மை அளிக்கும் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் ஜொகூர் அரசாங்கத்திடம் கொண்டு செல்லப்படும்.

இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மாதாந்திர கூட்டத்தில் இந்த விஷயம் கொண்டு வரப்படும் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் அப்துல் கரீம் கூறினார். மேலும், இந்த 46 திட்டங்களையும் முன் வைப்பேன் என்றார்.

“சிலாங்கூரில் இருப்பது ஜொகூரில் இல்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) நிர்வாகம் சிலாங்கூரை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மிகப்பெரிய பங்களிப்பாளராக மாற்றியது.

நேற்றிரவு பெர்மாத்தாங் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார். இந்நிகழ்வில் சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டு பேசினார்.

பந்துவான் கெயிடுபான் செஜாத்ரா சிலாங்கூர் (பிங்காஸ்) திட்டத்தின் கீழ் மாதம் 300 ரிங்கிட் வழங்குதல், ஜோம் ஷாப்பிங் பெரயான் மற்றும் சட்ட நிதி உதவி ஆகியவை தனது கவனத்தை ஈர்த்ததாக ஹாசன் குறிப்பிட்டார்.


Pengarang :