SELANGOR

சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தின் (இன்சான்) கீழ் 5.24 மில்லியன் தனிநபர்கள் பதிவு

உலு லங்காட், ஜூலை 13: சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தின் (இன்சான்) கீழ் ஜூன் 30 வரை மொத்தம் 5.24 மில்லியன் தனிநபர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

தோராயமாக 3.5 மில்லியன் சிலாங்கூர் வாக்காளர்கள், பிறந்து  30 நாட்கள் ஆன குழந்தை முதல்  ஆறு வயது  பிள்ளைகள் வரையிலான  (750,000), மற்றும் ஏழு முதல் 19 வயது வரை உள்ள பிள்ளைகளும், பதின்ம வயதினர் (900,843) மற்றும் பொது மக்களும் (81,797)  இந்த பொது காப்புறுதி திட்டத்தில் பயன் பெறுவர் என இன்சான் திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர் சுஹாய்டா ஜமாலுடின் கூறினார்,

 

“இருப்பினும், சிலாங்கூரில் இன்னும் பலர் இந்தத் திட்டத்தைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர்,  விபத்துக்கள் காரணமாக ஏற்படும்  இழப்புகளுக்கு வழங்கப்படும்  தொகைகள்  சுமார் 100  விழுக்காடு என அவர் குறிப்பிட்டார்.

 

“இந்த நபர்கள் தானாக எங்கள் அமைப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளனர், எனவே விபத்து அல்லது இறப்பு ஏற்பட்டால், நீங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளீர்களா மற்றும் வழங்கப்படும் இழப்பீட்டிற்கு தகுதியுடையவரா என்பதை சரிபார்க்க எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

 

இன்சான் என்பது ஆறு மில்லியன் சிலாங்கூர் குடிமக்களுக்காக மாநில அரசு நிறுவனமான எம்பிஐ ஆல் செயல்படுத்தப்படும் பொது குழு காப்பீடு ஆகும்.

 

சிலாங்கூர் மாநில முகவரி கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அல்லது சிலாங்கூரில் வாக்காளர்களாக  பதிவை கொண்டவர்களுக்கு  மட்டுமே இன்சான் திட்டத்திற்கு  தகுதி பெறுவர்.

இந்த காப்பீடு திட்டமானது, நிரந்தர ஊனம் மற்றும் விபத்துகளால் ஏற்படும் இறப்பு போன்றவற்றிற்கு RM10,000 வரையிலான தொகையை வழங்குகிறது.


Pengarang :