SELANGOR

ஐந்தாண்டுகால சாதனை அறிக்கையை சிலாங்கூர் அரசு வெளியிட்டது

ஷா ஆலம், ஜூலை 13 – மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு கடந்த 2018 முதல் 2023 வரையில்
அடைந்த சாதனைகளை விவரிக்கும் அதன் ஐந்தாண்டு அறிக்கை அட்டையை
வெளியிட்டது.

மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஏராளமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும்
முன்னெடுப்புகள் குறிப்பாக, நோய்த் தொற்றுப் பரவலுக்குப்
பிந்தைய மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பக்காத்தான் ஹராப்பான்
தலைமையிலான நிர்வாகம் செய்த சாதனைகள் அந்த 161 பக்க ஆவணத்தில்
விவரிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலாங்கூரின் செழிப்பான மற்றும் பொன்னான ஐந்தாண்டுகள். 2018 முதல்
2023 வரையிலான சிலாங்கூர் மாநில அரசின் சாதனை மற்றும் வெற்றி
அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசின் நிர்வாகம் தொடர்பான
அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய சிலாங்கூர் மக்கள், ஊடகங்கள் மற்றும்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் இன்று
தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

மலேசியாவின் புள்ளி விபரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி,
சிலாங்கூர் தேசியப் பொருளாதாரத்தில் 25.5 சதவீத பங்களிப்பை அளித்து ஒரு
முக்கியமான பொருளாதார சக்தியாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதனை அறிக்கை அட்டையை இங்கே பதிவிறக்கம் செய்யலாம் .


Pengarang :