SELANGOR

மாநகர அந்தஸ்தை அடைவதற்காக பொது உடைமைகள் மேம்படுத்தப்படுகிறது – கிள்ளான் மாநகராட்சி 

ஷா ஆலம், ஜூலை 14: எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கிள்ளான் மாநகராட்சி (MPK) நகர அந்தஸ்தை அடைவதற்காக அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள பொது உடைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மதிப்பீட்டின் நிலை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், அதற்கு முன் உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகத்திடம் (KPKT) ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் என்றும் யாங் டி பெர்துவான் நோராயினி ரோஸ்லான் கூறினார்.

“நவம்பர் 23 அன்று எதிர்பார்க்கப்படும் நகர அந்தஸ்துக்கு இன்னும் 132 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த பொறுப்பை ஊழியர்கள் ஏற்றுக்கொள்வது ஒரு பெரிய சவாலாகும்.

“எம்பிகே சமூகத்திற்கான சேவைகளின் தரத்தை தீவிரமாக மேம்படுத்துகிறது, குறிப்பாகத் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் சுற்று சூழலை அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று டேவான் ஹம்சாவில் நடைபெற்ற கிள்ளான் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் நோராயினி ரோஸ்லான் தெரிவித்தார்.

கிள்ளான், நகரம் என்ற அந்தஸ்தை பெற்றாலும், அவ்விடத்தை அரச நகரமாகத் தனது தரப்பு தொடர்ந்து செயல்படும் என்றார்.


“கிள்ளான் நகராட்சியை அரச பாரம்பரிய நகரமாகவும், உலகளவில் போட்டித் துறைமுகமாகவும் மேம்படுத்த வேண்டும்,“ என்றார்.


Pengarang :