NATIONAL

மாநிலத் தேர்தல்- பாதுகாப்பு பணியில் 7,000 ரேலா உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவர்

கப்பளா பாத்தாஸ், ஜூலை 14- வரும் 15வது மாநிலத் தேர்தலை
முன்னிட்டு தன்னார்வலர் உறுப்பினர் துறை (ரேலா) 6,735 உறுப்பினர்களை
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு
ஆகிய ஆறு மாநிலங்களில் பணியமர்த்தவுள்ளது.

நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல் துறை உள்ளிட்ட இதர
பாதுகாப்புப் படையினருடன் ரேலா உறுப்பினர்கள் இணைந்து
செயல்படுவர் என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சம்சுல்
அனுவார் நஸாரா கூறினார்.

ஆறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஜூலை
29ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும் ஆகஸ்டு 12ஆம் தேதி வாக்களிப்பும்
நடைபெறவுள்ளது. மாநிலத் தேர்தல்கள் சுமூகமான முறையில்
நடைபெறுவதை உறுதி செய்ய இதர பாதுகாப்பு படையினருடன் ரேலா
உறுப்பினர்களும் இணைந்து பணிகளை மேற்கொள்வர் என அவர்
தெரிவித்தார்.

அனைத்து இடங்களிலும் குறிப்பாக, பிரச்சனைக்குரிய பகுதிகளில் ரேலா
உறுப்பினர்களை நிறுத்தி வைப்போம். இதர பாதுகாப்பு படையினர்
குறிப்பாக போலீசாரின் உத்தரவைப் பின்பற்றி ரேலா உறுப்பினர்கள்
செயல்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற பினாங்கு ரேலா உறுப்பினர்களுடனான ஒன்று
கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தலை எதிர் கொண்ட அனுபவம் போலீசாருக்கும் ரேலா
உறுப்பினர்களுக்கும் உள்ளதால் மாநிலத் தேர்தலை எதிர் கொள்ள
அவர்கள் முழு தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :