SELANGOR

2023க்கான அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைகளை அகற்றும் அறையை அழகுபடுத்தும் போட்டி – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 17: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) நடத்தும் 2023க்கான அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைகளை அகற்றும் அறையை அழகுபடுத்தும் போட்டியில் பங்கேற்கப் பொதுமக்கள், குறிப்பாகக் குடியிருப்புகளில் வசிக்கும் இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இப்போட்டியில் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு குழுவில் குறைந்தது ஐந்து இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இப்போட்டியில் கூட்டு நிர்வாகக் குழு (JMB) அல்லது பெர்படானன் பென்குருசன் (MC) உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

வெற்றி பெற்ற குழுவிற்கு RM1,000 ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். அதே சமயம் கூட்டு நிர்வாகக் குழு (JMB) அல்லது பெர்படானன் பென்குருசன் (MC)  பிரிவில் வெற்றி பெறுவோருக்கு மூன்று ‘லீச் பின்களும் ‘ சான்றிதழும் வழங்கப்படும்

“இந்தப் போட்டி, இளைஞர்களிடையே அவரவர் குடியிருப்பு பகுதிகளின் மேம்பாட்டின் மேல் பற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஜூலை 15 தொடங்கி செப்டம்பர் 8 வரை ஆகும் மற்றும் குப்பை அகற்றும் அறையை அழகுபடுத்த தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவதற்குச் செலவு செய்த பணத்தை இரசிது வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குழுவும் RM1,000 வரை பெற்று கொள்ள முடியும்.


Pengarang :