SELANGOR

மக்கள் பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதில் தீவிரம் – சுங்கை ரமால் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 17: தொகுதிகள் கலைக்கப் பட்டாலும் சுங்கை ரமால், காஜாங் தொகுதியின் பொறுப்பாளர், மக்கள் பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதில் தீவிரமாக இருக்கிறார்.

சுங்கை தங்காஸ், தொரோபிக்கா அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் தொட்டி வெடித்தது போன்ற உடனடி தீர்வுகள் தேவைப்படும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப் பட்டதாக மஸ்வான் ஜோஹர் கூறினார்.

“கூட்டு மேலாண்மை அமைப்பு (ஜேஎம்பி) உதவி பெற என்னைத் தொடர்பு கொண்ட பிறகு நான் சுங்கை தங்காஸில் உள்ள தொரோபிக்கா அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தேன்.

“அந்த அடுக்குமாடி குடியிருப்பின் B பிளாக்கில் உள்ள தண்ணீர் தொட்டி வெடித்ததில் நீர் நிரம்பி வழிந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள பல வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன.

“ஜேஎம்பிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தொடர் நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பண உதவியும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :