SELANGOR

பண்டிக்கைக் கால அல்லது பழப் பருவ வியாபாரிகள் ஹிஜ்ரா நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், ஜூலை 17: பண்டிக்கைக் கால அல்லது  பழப் பருவ வியாபாரிகள், சிலாங்கூர் ஹிஜ்ரா கீழ் வழங்கப்படும் RM20,000 வரையிலான நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஐ-பெர்மூசிம் நிதி உதவிக்கு mikrokredit.selangor.gov.my என்ற இணையத்தளத்தின் முலம்  விண்ணப்பிக்கலாம்  அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஐ-பெர்மூசிம் நிதி திட்டத்தின் மூலம், சிலாங்கூரில் உள்ள பல தொழில் முனைவோர் பண்டிகை அல்லது பழக் காலங்களில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிக மூலதனத்தைப் பெற ஹிஜ்ரா வெற்றிகரமாக உதவியுள்ளது.

“இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் RM20,000 வரையிலான நிதியுதவி வர்த்தகர்களுக்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரருக்கு  தேவைப்படும்  தகுதிகள் பின்வருமாறு:

மலேசியர் சிலாங்கூர் குடிமக்கள் அல்லது

சிலாங்கூரில் வசிப்பவர்கள்

18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள்

வணிகம் ஏற்கனவே இயங்கி வர வேண்டும்

குறிப்பிட்ட வணிக வளாகம் இருத்தல் வேண்டும்

செல்லுபடியாகும் வணிக உரிமம்/அனுமதியின் நகல்

நிதி நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களிடமிருந்து மோசமான நிதிப் பதிவுகள் இல்லாமை இருத்தல்

வணிகத்தில் நேரடியாக ஈடுபட்டிருக்க வேண்டும்


சிலாங்கூர் பட்ஜெட் 2023 யில் ஹிஜ்ராத் திட்டத்தை மேம்படுத்தவும், தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு உதவும் RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டது.


Pengarang :