SELANGOR

தஞ்சோங் சிப்பாட்  தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட 18 சீரமைப்பு திட்டங்களில் ஒன்பது நிறைவடைந்துள்ளன

ஷா ஆலம், ஜூலை 23: பென்யாயாங் சிலாங்கூர் திட்டத்தின் (PSP) கீழ் தஞ்சோங் சிப்பாட்  தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட 18 சீரமைப்பு திட்டங்களில் ஒன்பது இதுவரை RM1.02 மில்லியன் செலவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

பொது மண்டபம், மசூதி, ஃபுட்சல் கோர்ட், பொது மேடையை சீரமைத்தல், சாலையை சரிசெய்தல் மற்றும் செப்பனிடுதல் மற்றும் 20 சோலார் விளக்கு கம்பங்களை நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என்று தொகுதியின் நடப்பு உறுப்பினர் கூறினார்.

“ஒன்பது திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவை விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மேம்படுத்தப்பட்ட வசதிகளால் குடியிருப்பாளர்கள் பயனடைந்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம், இதனால் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அவைகளைச் சேதப்படுத்தாது பயன்படுத்த வேண்டும்” என்று போர்ஹான் அமன் ஷா சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பென்யாயாங் சிலாங்கூர் திட்டம் என்பது கட்டிட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மாநில அரசின் முன் முயற்சியாகும் மற்றும் செப்டம்பர் 2022 முதல் அனைத்து 56 தொகுதிகளிலும் இது செயல் படுத்தப்பட்டது.

2023 பட்ஜெட்டில், டத்தோ மந்திரி புசார், மக்களின் நலனுக்காக சிறிய திட்டங்களை வழங்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் பென்யாயாங் சிலாங்கூர் திட்டத்திற்கு RM28 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் முன் உரிமையானது உள்கட்டமைப்பு பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு ஒதுக்கீடுகள் இல்லாத அரசு பொது வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :