NATIONAL

அபராதம் விதிக்கப் படுவதைத் தவிர்க்க பொய் புகார்

கோலாலம்பூர், ஜூலை 31: புதிய மைகாட் அடையாள அட்டையைத் தொலைத்து விட்டதால் அபராதம் விதிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்காகத் தான் கொள்ளையடிக்கப் பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பொய் புகார் அளித்தார்.

இருப்பினும், 24 வயதான பெண்ணின் செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது தந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.50 மணியளவில் அம்பாங் காவல் நிலையத்தில் சுயதொழில் செய்யும் அப்பெண் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

மாலை 5 மணியளவில் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது பையைப் பறித்து சென்றதாக அப்பெண் கூறினார்.

அப்பெண்ணுக்கு இதற்கு முன்னர் குற்றப் பதிவும் எதுவும் இல்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டதாக முகமட் அசாம் கூறினார்.

அப்பெண்ணை நாளை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார், மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 182 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும். இக்குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

புதிய அடையாள அட்டை பெறும் பணியில் தேசியப் பதிவுத் துறை அபராதம் விதிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்காகப் பொய்யான புகாரை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :