SELANGOR

சட்டவிரோதப் பிளாஸ்டி மறுசுழற்சி தொழிற்சாலைகள் இல்லாத மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது

ஷா ஆலம், ஆக 1- மாநில அரசின் கடுமையான முயற்சிகள் மற்றும்
விதிமுறைகள் காரணமாக சட்டவிரோதப் பிளாஸ்டிக் மறுசுழற்சி
தொழிற்சாலைகள் இல்லாத மாநிலமாகச் சிலாங்கூர் உருவாக்கியுள்ளது.

சிலாங்கூரில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் புதிய
விதிமுறைகளை மாநில அரசு கடந்தாண்டு அமல்படுத்தியதாக ஊராட்சி
மன்றங்கள் மற்றும் பொது போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கான புதிய லைசென்ஸ்
விண்ணப்பங்களை அரசு அமலாக்க நிறுவனங்களும் ஊராட்சி
மன்றங்களும் அங்கீகரிப்பதில்லை என்பதும் அந்த புதிய நிபந்தனைகளில்
அடங்கும் என்று அவர் சொன்னார்.

கடநதாண்டு மார்ச் மாதம் தொடங்கி பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி
செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. தற்போது லைசென்ஸ்
வைத்திருக்கும் வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு
மட்டுமே லைசென்ஸ்களை புதுப்பிக்க முடியும் என்றார் அவர்.

கடந்த 2018 முதல் 2020 வரை மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள்
மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சட்டவிரோதத்
தொழிற்சாலைகளுக்கு எதிராக ஊராட்சி மன்றங்கள் கடுமையான
நடவடிக்கை எடுப்பதற்கு பெரிதும் துணை புரிந்தன என்று அவர்
பெர்னாமாவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கையை நிறுத்திக்
கொள்ளும்படி 200 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகக்
கூறிய அவர், உத்தரவை மீறும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நிலத்தை
பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்றார்.


Pengarang :