NATIONAL

வரிகள் மக்களுக்குச் சுமையளிக்கும் வகையில் இருக்கக்கூடாது- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 1 – மலேசியாவின் வரிவிதிப்புக் கொள்கைகள் இரண்டு அடிப்படைக் கூறுகளால் வழிநடத்தப்பட வேண்டும். விதிக்கப்படும் வரி, வரி செலுத்துவோருக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வரி செலுத்துவோர் அதிக உற்பத்தி ஆற்றலைப் பெருக்கி தேசத்திற்குப் பங்களிப்பதை
ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம் என்று நிதியமைச்சருமான அவர் இன்று இரண்டு நாள் தேசிய வரி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார்.

வசூலிக்கப்படும் வரிகள் கசிவு இல்லாமல் புத்திசாலித்தனமாகச் செலவிடப்படுவதை
அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அடிப்படைக் கூறுகளும் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கொள்கைகளை நல்ல வணிகத்திற்கான
வாய்ப்புகளாகப் பார்ப்பார்கள். முதலீட்டாளர்களுக்கான வெகுமதி மட்டுமல்ல, மடாணி
கருத்துடன் ஒத்துப்போகும் உணர்வை அல்லது பொறுப்புணர்வை இது வளர்க்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :