SELANGOR

சிலாங்கூர் குழந்தைகளுக்குக் கல்வி திட்டங்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 1: 2018 முதல் கல்வி வளர்ச்சியில் பல்வேறு திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சிலாங்கூர் குழந்தைகளுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் கல்வி துறை வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் விரிவானது என்று சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் சமூகப் பொறுப்பு மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் கூறினார்.

“அவர்கள் சிலாங்கூரில் பிறக்கவில்லை என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிதாலும், அவர்கள் சில கல்வி திட்டங்களைப் பெற தகுதியுடையவர்கள்.

கல்வியை வளர்ப்பதற்கான சிலாங்கூர் முன்முயற்சி என்ற தலைப்பில் நேற்று ஆஸ்ட்ரோ அவனி பகி நேரடி நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

. கல்வி இலாகாவை கைவசம் வைத்திருக்கும்  துணிவு  மந்திரி புசார் சிலாங்கூருக்கு மட்டுமே உள்ளது.’’ “வேறு மாநிலங்களில் எவருக்கும்  இல்லை ,” என்று அவர் மேலும் கூறினார்.

மாநிலக் கல்விக் குழுவில், எம்பிஐ, சிலாங்கூர் அறக்கட்டளை (YS), மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN) மற்றும் சிலாங்கூர் மனித வள மேலாண்மைப் பிரிவு (Stanco) ஆகியவை அடங்கும்.

எம்பிஐயின் பெரும்பாலான செலவினங்கள் 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் RM20 மில்லியன் ஒதுக்கீட்டில் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) மூலம் மாநிலக் கல்வியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டதாக அஸ்ரி கூறினார்.


சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு திட்டம் (PTRS), பல்கலைக்கழக நுழைவு கட்டண உதவி மற்றும் உயர்கல்வி கூட உதவிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் திட்டங்களில் அடங்கும்.


Pengarang :